திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிசம்பர் 6, 2022 அன்று திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்படும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பக்தர்களின் வருகைக்காகவும் வசதிக்காகவும் போக்குவரத்துத் துறை கூடுதலாக 2700 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
வரும் டிசம்பர் 6, 2022 அன்று நடக்கவிருக்கும் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
அவற்றின் ஒரு பகுதியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக திருவண்ணாமலைக்கு கூடுதலாக 2700 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
திருவிழாவின் போது கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் இரயில்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நகரினை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 13 தற்காலிக பேருந்து நிலையங்களை ஏற்படுத்தியிருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.