வேப்பம்பூ சிறந்த கிருமி நாசினி. எனவெ இது குடலிலுள்ள மலக் கிருமிகளை ஒழிக்கும். இதன் கசப்பு வாய் அரோசகத்தை மாற்றும் வல்லமை கொண்டது. மேலும் இது சிறந்த பித்த நிவாரணியாகும். அடிக்கடி வரும் அனாவசியமான ஏப்பத்தை போக்கும். இதை அடிக்கடி உட்கொண்டு வர தொடர்ந்து வாதம் குறையும்.
வேப்பம்பூ ஊறல் குடி தண்ணீர் தயாரித்து தினமும் பருகி வர உடல் மெலிவு குறையும்.
வேப்பம்பூவின் கஷாயத்தை காலையிலும் மாலையிலும் சிறிதளவு சிறுவர்களை குடிக்க செய்தால் வயிறு சுத்தப்படும்.
இப்பூ கொண்டு ஊறல் கஷாயம் தயாரித்து, காலையிலும் மாலையிலும் பருகி வர குன்ப ரோகம் குறையும்.
வேப்பம்பூவை வறுத்து பொடி செய்து வேக வைத்த துவரம் பருப்பு ரசத்துடன் சேர்த்து உணவு பாகமாகக் கொள்ள வாந்தி , ஏப்பம், அரோசகம், நாத்தோடம் குறையும்.
உலர்த்திய வேப்பம்பூவை நெய்விட்டு வதக்கி, திட்டமான புளி, உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து துவையலாக்கிச் சாப்பிட பித்த நிவாரணமாகும்.
கொதிக்கும் தண்ணீரில் வேப்பம் பூவை போட்டு அதன் ஆவியைத் தொண்டைக்குள் படும்படி செய்தால் தொண்டைப் புண் ஆறும்.
வேப்பெண்ணையுடன் சம அளவு தேன் கலந்து இத்துடன் திரியை நனைத்து காதில் செலுத்தி வைக்கக் காது ரணம் நீங்கும்.
நிழலில் உலர்த்திய வேப்பம் பூவை நன்றாக இடித்து வஸ்திரகாயம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் சம அளவு வெடியுப்பு பொடி செய்து கலந்து ஒரு சீசாவில் பத்திரப்படுத்தி சலாகையினால் எடுத்துக் கண்ணில் தீட்டி வர கண் பார்வை துலக்கமாகும்.
கொதி நீரில் வேப்பம்பூவைப் போட்டு அதன் ஆவியைக் காதிற் பிடித்தால் காது சீழ் நிற்கும். இரணம் ஆறும்.