திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிசம்பர் 6, 2022 அன்று காலை பரணி தீபமும் மாலை திருவண்ணாமலை மலை மீது மகா தீபமும் ஏற்றும் வைபவம் நிகழ உள்ளது.
இந்த கார்த்திகை தீபம் 2022 திருவிழா நிகழ்ச்சி நிரலைக் கீழே காணலாம்.
தேதி | திருவிழா விபரம் |
27.11.2022 | கொடியேற்றம் – வெள்ளி வாகனம், சிம்ம வாகனம் |
28.11.2022 | தங்க சூரிய பிரபை வாகனம், வெள்ளி இந்திர விமானங்கள் |
29.11.2022 | சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனம் |
30.11.2022 | வெள்ளி காமதேனு வாகனம் |
01.12.2022 | வெள்ளி ரிஷப வாகனம் |
02.12.2022 | வெள்ளி ரதம் |
03.12.2022 | மகா ரதம் |
04.12.2022 | பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம் |
05.12.2022 | கைலாச வாகனம், காமதேனு வாகனம் |
06.12.2022 | பரணி தீபம் மற்றும் மகாதீபம். |
மேலும் விளக்கமான நிகழ்ச்சி நிரலுக்கு கீழே திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சார்பாக வெளியிட்டுள்ள அட்டவணையை தந்துள்ளோம்.