பலவிதமான பிணிகளைப் போக்குவதில் குங்குமப்பூ நிகரற்று விளங்குகிறது. இது காஷ்மீரில் கிடைக்கும் பதார்த்தங்களுக்கு சிவப்பு நிறங்கொடுக்க இது பயன்படுகிறது. இதனால் தலைவலி, கண் நோய், காது நோய், கப நோய், சூலை சுரம், சுக்கில நட்டம், தாகம், மேக நீர், பித்தாதிக்கம், வாந்தி, நீர்த்தோடம், வாயினிப்பு, பிரசவ மலினம் தீரும்.
குங்குமப்பூ ஒரு பங்கு, சுத்தமான நீர் என்பது பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும். குங்குமப்புவை நீரில் ஊறப்போட்டு வேளையொன்றுக்கு கால் அல்லது அரை ஆழாக்கு வீதம் காலை மாலை குடித்து வந்தால் மேற்கண்ட பிணிகள் நீங்கும்.
மந்தாக்கினிக்கு பதினைந்து பலம் சுத்தமான நீரில் ஒரு விராகன் எடை குங்குமப்பூ போட்டுக் குடிநீராக்கி குடிக்க இப்பிணி அகலும்.
வாய் மணக்க, கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூ, ரோஜா இதழ்கள் சேர்த்து சாப்பிட வாய் மணக்கும். செரிமான சக்தி உண்டாகும்.
சுகப்பிரசவமாக தினமும் இரவில் காய்ச்சிய ஆவின் பாலில் குங்குமப்பூ கலந்து பருகிவர சுகப்பிரசவமாகும்.
கர்ப்பம் வெளிப்படாமல் அவதிப்படுகிறவர்கள் சோம்புக் கஷாயத்தில் ஒரு கழஞ்சு குங்குமப்பூ கரைத்துக் கொடுக்க விரைவில் வெளிப்படும்.
குடல் புண் ஆற அதிகமாக மது அருந்தி குடலில் புண் உள்ளவர்களும் இதே மாதிரி காய்ச்சிய ஆவின் பாலில் சுத்தமான குங்குமப்பூ கலந்து பருகி வர வேண்டும். இந்த நேரத்தில் கார பதார்த்தங்கள், கடின பதார்த்தங்கள் சாப்பிடக் கூடாது. இரவில் அதிக நேரம் கண் விழித்திருக்கலாகாது.
தலைவலி நீர்த்தோடம் நீங்க குங்குமப்பூவை தாய்பாலில் உறைத்து நெற்றியில் பற்றுப் போட்டுக் கொள்ள பிணிகள் குறையும்.
குங்குமப்பூவுடன் அபினி, விளாம்பிசின், பனை வெல்லம், கொஞ்சம் சேர்த்தரைத்து ஒரு சிறு தாளில் தடவி கன்னப் பொறிகள் மீது போட்டாலும் இப்பிணிகள் போகும்.