உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை திரு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலை நாடி பல நாடுகளில் இருந்தும், உலகின் பல திசைகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணமே உள்ளனர். அவர்களுக்கு பயன்படும் விதத்தில் திருக்கோயிலில் தினசரி நிகழ்வுகளின் கால அட்டவணையை இங்கு பதிவிட்டுள்ளோம்.
காலை நடை திறப்பு | அதிகாலை 5 மணி |
மதிய நடை சாத்துதல் | 12.30 மணி |
மாலை நடை திறப்பு | 3.30 மணி |
இரவு நடை சாத்துதல் | 9.30 மண |
கட்டண தரிசன விபரங்கள்:
திருவண்ணாமலை திரு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அண்ணாமலையாரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் சர்வ தரிசனம் வாயிலாக இலவசமாகவும், சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.50 செலுத்தியும் தரிசிக்கலாம். கூட்ட நெரிசலான நேரங்களில், காலம் விரையமாக்க விரும்பாத அல்லது இயலாத பக்தர்கள் சந்நிதிக்குள்ளேயே கட்டணம் நபருக்கு ரூ.50 செலுத்தி விரைவில் அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசிக்கலாம்.
தினசரி பூஜை விபரங்கள்:
கீழ்காணும் பூஜைகள் தினசரி திருக்கோவிலில் நடைபெறுகிறது.
கோ பூஜை | 05:00 AM to 05:15 AM IST |
உஷக்கால பூஜை | 05:30 AM to 07:00 AM IST |
காலசந்தி பூஜை | 08:00 AM to 09:30 AM IST |
உச்சிக்கால பூஜை | 10:00 AM to 11:30 AM IST |
சாயரட்சை பூஜை | 05:30 PM to 07:00 PM IST |
இரண்டாம் கால பூஜை | 08:00 PM to 09:00 PM IST |
அர்த்தஜாம பூஜை | 09:00 PM to 09:30 PM IST |
இதர சேவைகளும் அதற்கான கட்டணங்களும்
பக்தர்களுக்காக திருக்கோவில் நிர்வாகம் அபிஷேகம் உட்பட்ட பல்வேறு சேவைகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் விபரங்கள் பின்வருமாறு.
சுவாமி அம்மன் சிறப்பு அபிஷேகம் | ₹2500 |
பால் அபிஷேகம் | ₹1000 |
விநாயகர் சுவாமி அம்மன் சிறப்பு அபிஷேகம் | ₹3000 |
பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் | ₹4500 |
இதர சன்னதிகள் அபிஷேகம் | ₹1000 |
1008 சங்கு பூஜை சிறப்பு அபிஷேகம் | ₹10000 |
திருக்கல்யாண உற்சவம் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை | ₹8500 |
அன்னதானம் (ஒரு நாளைக்கு 300 பேர்களுக்கு) | ₹7500 |