சர்க்கரை நோயாளிகளின் உடல் பலகீனத்தை இயற்கை மருத்துவம் மூலம் போக்கி நோயையும் குணமாக்க முடியும். இயற்கை மருத்துவர்கள் கொடுக்கும் உயிர்சத்துள்ள இயற்கை உணவுகளாலும், உடலுக்கு நலம் தரும் சைவ உணவுகளாலும், கருணை அன்பு தாய்மை உள்ளம் கொண்ட பத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளாலும் தான் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்வாழ்வு கொடுக்க முடியும்.
பொதுவாக சர்க்கரை நோய்க்கு தேங்காய் சாப்பிடாதே, பழங்கள் சாப்பிடாதே, பூமிக்கு அடியில் விளைவதை சாப்பிடாதே என்று சொல்லி பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இயற்கை உணவு மற்றும் மருத்துவத்தில் மிகத் தெளிவாக சர்க்கைரை நோயை குணமாக்கும் பலதும் இருக்கிறது
தேங்காய் தான் சர்க்கரை நோயாளிகளின் உடல் பலகீனத்தை போக்கி நோய்களை குணமாக்குவதில் முதல் உணவாக இருக்கிறாது. பூமியில் விளையும் உணவுகளின் அரசன் யார் என்று கேட்டால் தேங்காய் தான் என்று இயற்கை மருத்துவம் சொல்கிறது. ஆகவே தேங்காய்க்கு இணையான உணவு பூமியில் வேறு எதுவும் இல்லை. தேங்காயை உணவாகக் கொடுத்தே எல்லா நோய்களையும் குணமாக்கலாம்.
தேங்காய், பச்சை நிலக்கடலை, வறுக்காத எள்ளும் கருப்பட்டியும் கலந்து இடித்த இயற்கை லட்டும், சீசன்களில் கிடைக்கும் பழங்கள் அனைத்தும் மேலும் கீரைகள் கிழங்கு வகைகள் அனைத்தும் சாப்பிட வேண்டும்.
கிழங்கு வகைகளை மட்டும் சர்க்கரை நோயாளிகள் குறைவாக சாப்பிட வேண்டும். இந்த உணவுகள் தான் உடலில் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்து உடல் பலகீனத்தை போக்கி நோய்களை குணமாக்கி தளர்ந்த்து கிடந்த உடம்பை நிமிர்ந்து நிற்கச் செய்யும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு முதல் எதிரி அரிசி உணவுதான். முடிந்தவரை அரிசி உணவை மறப்பதே நல்லது. அரிசி உணவு ஒரு வேளை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று நினைத்தால் அரிசி சாதத்தை குறைத்து காய்கள், கீரைகள், அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவுடன் தேங்காயும் சேர்த்து சாப்பிடுங்கள். சுண்டவற்றல் தினமும் சாப்பிட வேண்டும். சமையல் உணவை சாப்பிடுவதற்கு முன் இயற்கை உணவு சிறிது சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் கேப்பை, கம்பு, சோளம், கோதுமை இவைகளை வகைக்கு ஒரு கிலோ வாங்கி சுத்தம் செய்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தானியங்களை ரொம்பவும் நைசாக அரைக்கக் கூடாது. நார்ச்சத்து தேவையாக இருப்பதால் சொரசொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவில் தோசை தயார் செய்து சாப்பிடலாம். தோசை மாவில் நாட்டு வெங்காயம், கறிவேப்பிலை, கிடைத்த கீரைகள் கலந்து தயார் செய்யலாம். சிறிது மிளகுத் தூள் கலந்து தயார் செய்தால் இதற்கு சட்னி தேவையில்லை. சாப்பிட மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
தானிய மாவுடன் நாட்டு வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, கிடைத்த கீரை மிளகுத்தூள், சிறிது உப்பு, கலந்து மாவை கெட்டியாக பிசைந்து தோசைக் கல்லில் எண்ணைத் தடவி ரொட்டியாக தயார் செய்து சாப்பிடலாம். ரொட்டி தயார் செய்யும் மாவு கலவையுடன் தேங்காய்ப் பூவும் சேர்த்துக் கொள்ளலாம்.
கஞ்சி தயார் செய்து சாப்பிடலாம். உப்புமா தயார் செய்து சாப்பிடலாம். நாட்ட்ச் சர்க்கரை தேங்காய்ப்ப் பூ கலந்து புட்டு செய்து சாப்பிடலாம். கொழுகட்டையாக அவித்தும் சாப்பிடலாம். நாட்டுச் சர்க்கரை தேங்காய்ப்பூ கலந்து கழியாக செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் கருப்பு சுண்டல், கருப்பு மொச்சை, பாசிப் பயறு, உளுந்தம் பயிறு இந்த நான்கு வகைகளையும் தினமும் ஒவ்வொரு வகையாக அவித்து சாப்பிடலாம். உப்பு குறைவாக போடவும் தேங்காய்ப்பூ சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. கறிவேப்பிலையை கத்தரியால் பொடியாக வெட்டி போட்டுக் கொள்ளுங்கள். தாளிதம் வேண்டாம்.
இந்த நான்கு வகை பயறுகளும் நார்ச்சத்து உள்ளவைகள். மற்ற பயறு வகைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவாது. சர்க்கரை நோயாளிகள் காரட் பீறூத் இவைகளை பச்சையாக உண்பது நல்லது. பச்சையாக சாப்பிட்டால் ரத்த விருத்தியை உண்டு பண்ணும்.