பெண்களுக்கு கூந்தல் அழகு மிகவும் இன்றியமையாதது ஆகும். கூந்தல் அடர்த்தியாக இருக்கும் பெண்கள் தான் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். மேலும் அவர்கள் தான் மற்றவர்களை எளிதில் கவர்கிறார்கள். மிகுந்த அழகாகவும் இருக்கிறார்கள். எனவே பெண்கள் தங்கள் கூந்தலை மிகவும் எச்சரிக்கையாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த பதிவில் முடி கொட்டுவதைத் தவிர்க்கவு, கூந்தல் அடர்த்தியாக வளரவும், இளநரை போகவும் பயன்படும் 10 குறிப்புகளைப் பார்ப்போம்.
- துவரம் பருப்பை முதல் நாள் இரவே ஊறவைத்துக் காலையில் அதை நன்கு மைய அரைத்துத் தலையில் தேய்த்து ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க கூந்தல் உதிர்வது நிற்கும். இது மிகவும் எளிய முறை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம்.
- வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வரலாம். வெந்தயத்தைத் தலைக்குத் தேய்க்கும் எண்ணையிலும் போட்டு ஊற வைத்தும் தலைக்குத் தேய்க்கலாம். இதனால் கூந்தல் உதிர்வது நிற்பதுடன் உடலும் குளிர்ச்சியடையும்.
- பச்சை நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி எலுமிச்சம் இலைகளுடன் சேர்த்து நன்கு அரைத்துப் பாலில் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர கூந்தல் உதிர்வது நிற்கும்.
- ஊமத்தைக் காய் சாறு இருநூற்று ஐம்பது மில்லி எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணயில் விட்டுக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வர கூந்தல் உதிர்வது நிற்கும்.
- துவரம்பருப்பை முதல் நாள் ஊற வைத்து மறுநாள் நீர்வடிய எடுத்து பால் சேர்த்து அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து தலைக்குக் குளியுங்கள். முடி உதிர்வது நிற்கும்.
- 25 கிராம் குன்றிமணியுடன் 1 டீஸ்பூன் வெந்தயத்தைப் பொடி செய்து அதைத் தேங்காய் எண்ணையில் கலந்து ஒரு வாரம் ஊற வைத்து பயன்படுத்தி வந்தாலும் முடி கொட்டுவது நிற்கும்.
- பசுமையான கறிவேப்பிலையைப் பால் விட்டு அரைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து தலையை வெறும் நீரில் கழுவி வர, முடி உதிர்வது நின்று புதிய முடியும் நன்றாக செழித்து வளரும்.
- நாட்டு வெங்காயத்தை அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து தலைக்குத் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
- தயிரை தலைக்குத் தேய்த்து நன்கு ஊறியபின் சீயக்காய் தூள் போட்டு தேய்த்துக் குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
- முசுமுசுக்கைச் சாறு 200மில்லி நல்லெண்ணை 200மில்லி சேர்த்து நன்று காய்ச்சித் தைலமாக்கி, அதை தலைக்குத் தேய்த்து வர, கூந்தல் உதிர்வது நிற்கும். இளநரையும் மாறும்.