திருக்கார்த்திகை திருவிழாவின் முதன்மை மற்றும் பிரதான நிகழ்ச்சியான திருவண்ணாமலை மலை மீது இன்று மாலை (டிசம்பர் 6, 2022) சரியாக 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.
அதிகாலை திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து. சரியாக 5.58 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் நர்த்தன தரிசனத்திற்கு எழுந்தருளியதோடு உடன் மலை மீது தீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலையார் பக்தர்கள் அனைவருக்கும் ஜோதி சொரூபமாக காட்சியளித்தார். இந்த வைபோகத்திற்காக மலை மீது இருக்கும் சுமார் 9 அடி தீபகுண்டத்தில் தீபம் ஏற்றிய வீடியோ காட்சி இதோ